இசை, கவின் கலை மற்றும் நிகழ்த்துக் கலையின் அனைத்துப் பிரிவுகளிலும் கல்விப் பயிற்சி வழங்குதல், இசை, கவின்கலை மற்றும் நிகழ்த்துக் கலையில் ஆராய்ச்சிக்கான வழிவகைகள், கல்வி மேம்பாடு மற்றும் அத்துறை தொடர்பான அறிவுசார் பரப்புரை செய்வதற்கும், பாரம்பரிய இந்திய இசை, நிகழ்த்துக்கலை மற்றும் கவின் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் 2013 ஆம் ஆண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வேந்தராகக் கொண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகள், சென்னை மற்றும் கும்பகோணத்தில் செயல்படும் அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி மற்றும் திருச்சிராப்பள்ளியில் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் இணைவுடன் செயல்படுகிறது. மேலும் தமிழிசை கல்லூரி, இராஜா அண்ணாமலை மன்றம், சென்னை மற்றும் சத்குரு சங்கீத வித்யாலயம், மதுரை ஆகிய கல்லூரிகளும் இப்பல்கலைக் கழகத்தின் இணைவுடன் செயல்படுகின்றன. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக, சென்னை அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஆவார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் சௌமியா அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கீத கலாநிதி முனைவர் எஸ்,இராமநாதன் மற்றும் சங்கீத கலாச்சார்யா திருமதி முக்தா அவர்களிடம் இசை பயின்ற முனைவர் சௌமியா அவர்கள் சிறந்த குரலிசைக் கலைஞராவார். இவர் பெற்றுள்ள பல்வேறு விருதுகளில் பெருமைக்குரிய விருதுகளான தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி விருது ஆகிய விருதுகளும் அடங்கும். மேலும் இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் நோக்கம்
இசை மற்றும் நுண்கலைகளின் மேம்பாட்டிற்காகவும், கற்றலின் முன்னேற்றத்திற்காகவும், ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், ஆடியோ, வீடியோ பதிவு மற்றும் தமிழ் மாநிலத்தில் உள்ள அனைத்து இசை, நுண்கலைகள் மற்றும் நிகழ்த்துக் கலைகளின் அனைத்துப் பிரிவுகளையும் பிரபலப்படுத்துவதும் நோக்கமாகும்.
இருப்பிடம்
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை-600028, அடையாறு ஆற்றங்கரையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் பிராடி கேசில் என்னும் கட்டடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் எம்.எஃப்.ஏ ஓவியம் மற்றும் காட்சிவழித் தொடர்புத் துறை தவிர குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம், நாகஸ்வரம் மற்றும் பரதநாட்டியம் பிரிவுகளில் முதுகலை மற்றும் எம்.பில் படிப்புகளை வழங்குகிறது.
முதுகலை பட்டப்படிப்புகள் - |
வார இறுதி நாட்கள் – 3 ஆண்டுகள் |
பிற பிரிவுகள் |
குரலிசை, நாதஸ்வரம், வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், ஓவியம் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பு |
ஓவியம் மற்றும் காட்சிவழி தகவல் தொடர்பு வடிவமைப்பு பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பு |
ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) படிப்புகள் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் |
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் இணைவுபெற்ற கல்வி நிறுவனங்கள் :-
|
கல்லூரியின் பெயர் |
|
முகவரி |
1, |
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகள் |
|
டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600028 |
|
|
|
பசுமலை, மதுரை – 625004 |
|
|
|
மலுமிச்சம்பட்டி அஞ்சல், செட்டிப்பாளையம் ரோடு, மலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர் – 641050 |
|
|
|
திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம் – 613204 |
2 |
அரசு கவின்கலைக் கல்லூரிகள் |
|
31, ஈ.வெ,ரா பெரியார் சாலை, பெரியமேடு, சென்னை – 600003 |
|
|
|
சுவாமிமலை ரோடு, மேலக்கொட்டையூர், கும்பகோணம் – 612002 |
3 |
அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி |
|
மாமல்லபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் – 603104 |
4 |
எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி |
|
சி.ஐ.டி வளாகம், தரமணி, சென்னை – 600113 |
அரசு உதவிபெறும் கல்லூரி
|
கல்லூரியின் பெயர் |
|
முகவரி |
1, |
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி |
|
18, பென்வெல்ஸ் ரோடு, கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி – 620001 |
2. |
ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் |
|
லட்சுமி சுந்தரம் ஹால், 15ஏ கோகுலே ரோடு, பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில், தல்லாகுளம், மதுரை - 625002 |
சுயநிதிக் கல்லூரி
|
கல்லூரியின் பெயர் |
|
முகவரி |
1, |
ரவிராஜ் நுண்கலைக்கல்லூரி |
|
83, சம்பந்தம் சாலை மேற்கு, ஆர்.எஸ்.புரம், ஏ.ஜி.ப்ளாசா, கோயம்புத்தூர் – 641002 |
2, |
பரதம் |
|
36, கிழக்கு பூங்கா ரோடு, ஷெனாய் நகர், சென்னை – 600030 |
3. |
ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக்கல்லூரி |
|
ராஜா முத்தையா மன்றம், மேலூர் ரோடு, டாக்டர் அம்பேத்கர் ரோடு, மதுரை – 625020 |
4. |
ஸ்ரீ அன்னை காமாக்ஷி இசை மற்றும் கவின்கலைக் கல்லூரி |
|
979, லக்ஷ்மண சுவாமி சாலை, கே.கே.நகர், சென்னை – 600078 |
5. |
ஸ்ரீ தியாகராஜா இசைக்கல்லூரி |
|
(சின்னநாடார் கேசரி மெமோரியல் டிரஸ்ட்) நாரம் விள்ளை, பக்கோடே போஸ்ட், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் 629168 |
2016-17ஆம் ஆண்டு புதிதாக இணைவுபெற்ற சுயநிதிக் கல்லூரிகள்
|
கல்லூரியின் பெயர் |
|
முகவரி |
1, |
பாமி டியோர் திரைப்படம் மற்றும் ஊடகக் கல்லூரி |
|
அருளானந்தா நகர் மெயின் ரோடு, தஞ்சாவூர் – 613007 |
2 |
பாமி டியோர் திரைப்படம் மற்றும் ஊடகக் கல்லூரி |
|
பி.எஸ்.எஸ்.டவர், பாரதி நகர் முதல் மெயின் ரோடு, மேற்கு தாம்பரம் , சென்னை – 600063 |
3 |
அழகப்பா காலேஜ் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் அகாடமி |
|
அழகப்பாபுரம், காரைக்குடி – 630003 |
4. |
சென்னை பிலிம் இண்டஸ்டிரியல் ஸ்கூல் |
|
16, முதல் குறுக்குத் தெரு, 9வது மெயின் ரோடு, வால்மீகி நகர், சுவாமிநாதன் நகர், கொட்டிவாக்கம், சென்னை – 600041 |
5. |
தமிழ் இசைக் கல்லூரி |
|
ராஜா அண்ணாமலை மன்றம், 5, எஸ்பிளனேடு ரோடு, சென்னை – 600108 |
6. |
பிரிட்ஜ் அகாடமி நுண்கலைக் கல்லூரி |
|
27, சௌராஷ்டிரா நகர், 5வது தெரு, சூளைமேடு, சென்னை – 600094 |
7. |
மெக்கன்ஸ் ஊட்டி காலேஜ் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சரல் டிசைன் |
|
5/635, பேரார், கோத்தகிரி ரோடு, மைனாலா அஞ்சல், ஊட்டி 643002, நீலகிரி மாவட்டம் |
2017-18ஆம் ஆண்டு புதிதாக இணைவுபெற்ற சுயநிதிக் கல்லூரிகள்
|
கல்லூரியின் பெயர் |
|
முகவரி |
1, |
எம்.இ.டி காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் அண்டு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் |
|
13/142ஏ, 9/9, மொகல்ஸ் கார்டன், செண்பகராமன்புதூர், தோவாலை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம் - 629304 |